இந்த மாவட்டத்திற்கு இன்று விடுமுறை..!

june holiday

இராமநாதபுரம் ஏர்வாடி தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை ஒட்டி,  இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை வட்டம், ஏர்வாடி கிராமத்தில், ஏர்வாடி தர்ஹாவில் அமைந்துள்ள அல்குத்துபுல் அக்தாப் சுல்தான் செய்யது இபுராஹிம் ஷாஹித் ஒலியுல்லா தர்ஹாவில் சந்தனக்கூடு திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு எதிர்வரும் 13.06.2023 செவ்வாய்கிழமை அன்று “உள்ளூர் விடுமுறை” ஆகவும், அதனை ஈடு செய்யும் பொருட்டு 24.06.2023 அன்று சனிக்கிழமையினை வேலைநாளாகவும் அறிவிக்கப்படுகிறது. மேலும் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் 24.06.2023 அன்று வழக்கம்போல் இயங்கும்.

இந்த உள்ளூர் விடுமுறை நாள் 13.06.2023 செவ்வாய்கிழமை அன்று இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களும் அரசு பாதுகாப்பிற்கான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.பா.விஷ்ணு சந்திரன் அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்