நடப்பு ஆண்டில் பங்குனி உத்திர திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை- (பங்குனி 4-ம் தேதி) கொண்டாடப்படுகிறது.குறிப்பாக,பங்குனி உத்திர விழாவின் போது பழனி, திருச்செந்தூர், திருத்தணி, சுவாமிமலை, பழமுதிர்சோலை உள்ளிட்ட முருகன் கோயில்களில் தேர் திருவிழா வெகு சிறப்பாக நடைபெறும்.
இந்நிலையில்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அதன்படி,அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி,கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால்,முக்கிய தேர்வுகள் நடைபெறும் பள்ளி,கல்லூரிகளுக்கு இந்த விடுமுறை பொருந்தாது எனவும் மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜன் அறிவித்துள்ளார்.
அதே சமயம்,பங்குனி உத்திரத்தை முன்னிட்டு திருநெல்வேலி மாவட்டத்திற்கும் இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும்,கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும்,இன்று நடத்தப்படும் முக்கிய தேர்வுகள் அனைத்தும் எந்த வித மாற்றமும் இல்லாமல் நடைபெறும் என்றும்,இந்த உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மார்ச் 26 சனிக்கிழமை அன்று பணி நாளாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா : இந்திய தேசிய கிரிக்கெட் அணி மற்றும் இங்கிலாந்து தேசிய கிரிக்கெட் அணிக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட…
ஜல்கான்: மகாராஷ்டிரா மாநிலம் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த…
சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு எக்ஸ் தள பதிவை மீண்டும் தனது வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நாளை…
சென்னை: நடிகை நயன்தாரா திருமண ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷ் ரூ.10 கோடி கேட்டு தொடர்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி…
கொல்கத்தா: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 5 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடர்,…
ஜல்கான் : மகாராஷ்டிராவின் ஜல்கான் மாவட்டத்தில் நடந்த ரயில் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு என தகவல் வெளியாகியுள்ளது. தண்டவாளத்தில்…