குஷியோ குஷி…இன்று கல்வி நிறுவனங்கள்,அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

Default Image

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் இன்று(ஜூலை 6 ஆம் தேதி) நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு,கல்வி நிறுவனங்கள் மற்றும் மாவட்ட அரசு அலுவலங்களுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.எனினும்,அவசர கால பணிகளுக்காக மட்டும் மாவட்டத்தில் உள்ள தலைமை அலுவலகம் வழக்கம் போல இயங்கும்.

மேலும்,இன்றைய உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற ஜூலை 23 ஆம் தேதியன்று சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவிலின் கும்பாபிசேகமானது 418 ஆண்டுகளுக்கு பிறகு இன்று நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்