இந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை…!
ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதால், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார்.
தமிழகத்தில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தென்காசி, நெல்லை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்,ஊராட்சி ஒன்றிய தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகிற அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு வாக்குச்சாவடிகளில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளதால், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார்.