சென்னையில் இன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக அறிவிப்பு..!
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாளாக சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு.
சென்னையில் இன்று பள்ளிகளுக்கு முழு வேலை நாள் என சென்னை மாவட்டம் முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். தொடர் மழையால் விடப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் இன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை பாட வேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி பள்ளிகள் செயல்பட வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். இன்று ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் கிடையாது என்றும் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.