தமிழக சட்டப்பேரவை இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிலையில், போக்குவரத்துத்துறை மற்றும் சுற்றுலாத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.அதன்படி,வினாக்களின் நேரத்தின்போது எதிர்க்கட்சி சட்டமன்றஉறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், சுற்றுலாத்துறை அமைச்சர் மதி வேந்தன் ஆகியோர் பதில் அளித்து புதிய அறிவுப்புகளை அறிவிப்பார்கள்.
மேலும்,சுற்றுச்சூழலுக்கு உகந்த பேருந்துகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டிருக்கும் நிலையில்,அதற்கான அறிவுப்புகளை அமைச்சர் சிவசங்கர் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதே சமயம்,உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க சுற்றுலாக் கொள்கைகளை அமைச்சர் மதி வேந்தன் அறிமுகம் செய்யவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இதனிடையே,2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக திருத்த சட்ட முன்வடிவை பேரவையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி அறிமுகம் செய்கிறார்.இந்த புதிய மசோதாவின்படி, அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழக துணை வேந்தரை ஆளுநருக்கு பதிலாக அரசே நியமிக்கும்.ஏனெனில்,அம்பேத்கர் சட்ட பல்.கழக வேந்தராக முதல்வர் இருக்கும் வகையில் இந்த திருத்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது.
இதனிடையே,தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவை விதி எண் 110 இன் கீழ் புதிய அறிவுப்புகளை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
சென்னை : இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள "தக்…
சென்னை : தவெக தலைவர் விஜய், கடந்த மார்ச் மாதம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு…