70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் தேர்தல் முடிவுகளை வெளியிட்டு வருகிறது தேர்தல் ஆணையம். இந்த தேர்தலில் 62.59 சதவீத வாக்குகள் பதிவாகின. அதற்கான வாக்கு எண்ணிக்கை 22 மையங்களில் இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது நிலவரப்படி 70 தொகுதிகளில் 50 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றுள்ளது. பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது. மொத்தம் 70 தொகுதிகளில் 56 தொகுதிகளுக்கு அதிகாரபூர்வமாக அறிவிப்பை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.
இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி 3-வது முறையாக பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க உள்ளது. இதனை டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் அக்கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அதில் 3-வது முறையாக முதலமைச்சராகும் அரவிந்த் கெஜ்ரிவால் தொண்டர்கள் இடையே உரையாற்றி டெல்லி மக்களுக்கு நன்றி என தெரிவித்தார். இந்த நிலையில் டெல்லி முதல்வருக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து கூறி பதிவிட்டுள்ளார். அதில் மீண்டும் டெல்லியில் வென்றதுக்கு வாழ்த்துக்கள் எனவும், அடுத்த ஆண்டு இதை தமிழ்நாட்டு மக்கள் பின்பற்றுவார்கள் என்று தெரிவித்தார். மேலும் நேர்மை மற்றும் வளர்ச்சியை நோக்கி செல்லலாம் என குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூர் : பெங்களூரு மற்றும் பஞ்சாப் அணிகள் மோதும் இன்றைய ஐபிஎல் போட்டி, மழை காரணமாக 14 ஓவர் போட்டியாக…
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…