இன்று தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்று தலை நிமிர்ந்து சொல்லுகிறேன் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
திமுக பத்தாண்டு காலத்தில் செய்ய வேண்டிய சாதனையை ஒரே ஆண்டில் செய்துள்ளோம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சேலம் ஆத்தூரில் திமுகவின் ஓராண்டு சாதனை விளக்க கூட்டத்தில் உரையாற்றி உள்ளார். அவர், கடந்த ஆண்டு மே மாதம், தமிழகத்தில் திமுக வெற்றி பெற்று உதயசூரியன் உதயமானது. ஆனால், ஆட்சி பொறுப்பேற்றவுடன் எனக்குள் சற்று தயக்கம் இருந்தது.
அதற்கு காரணம் என்னவென்றால், 10 ஆண்டு கால திமுக ஆட்சியில் தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாகி இருந்தது. தமிழகம் 6 லட்சம் கோடி கடனுக்குள் இருந்தது. இந்த ஓராண்டு காலத்தில் தமிழகம் நிமிர்ந்து நிற்கிறது. இந்த ஓராண்டு காலம் எனக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது. திமுக பத்தாண்டு காலத்தில் செய்ய வேண்டிய சாதனையை ஒரே ஆண்டில் செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், திமுக ஆன்மீகத்திற்கு எதிரானது அல்ல. ஆனால், ஆன்மீகத்தின் பெயரால் இன்று பலர் திமுகவை குறை சொல்லி வருகின்றனர். கடந்த அதிமுக ஆட்சியில் ஒரே ஒருமுறைதான் மேட்டூர் அணை ஜூன்-12-ஆம் தேதி திறக்கப்பட்டது. இன்று மேட்டூர் ஆணை திறக்கப்பட்டுள்ளது. இந்த மேட்டூர் ஆணை திறப்பால் 5 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர். மக்கள் மட்டுமல்லாமல், இயற்கையும் நமக்கு தான் ஆதரவாக உள்ளது. திமுக அரசை ஆதரிக்கும் வண்ணம் நல்ல மழை பொலிந்து வருகிறது என தெரிவித்துள்ளார்.