கலைஞரின் பிறந்த இல்லத்திற்கு சென்ற உதயநிதி
நாகை மாவட்டம் திருக்குவளையில் தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் பிறந்த இல்லம் உள்ளது. இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் அவர்கள் விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பின் இன்று முதல்முறையாக கலைஞர் பிறந்த இல்லத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
இவருக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கலைஞரின் பிறந்த இல்லத்தில் உள்ள கலைஞரின் தாய், தந்தை, மறைந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், மறைந்த தமிழக முதல்வர் கலைஞர் ஆகியோரின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அதனை தொடர்ந்து அங்கு கூடியிருந்த திமுகவினர் விளையாட்டு துறை அமைச்சருக்கு பேட், பந்து ஆகிய உபகரணங்களை பரிசாக வழங்கினார். பின் கலைஞர் இல்ல நினைவகத்தில் உள்ள வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு 2021 சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத் துவக்கம் 2020 நவம்பர் 20ஆம் தேதி கலைஞர் பிறந்த இல்லத்தில் முன்பு தொடங்கி கைதானோம்.
இன்று அமைச்சராக முதல் முறை மீண்டும் வருகை புரிந்துள்ளேன் பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ்நாடு முதலமைச்சர் தலைவர் வழியில் மக்கள் பணியாற்றுவோம் என்று குறிப்பெழுதி உள்ளார்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…