பழைய பிணம் என்றாலும் புதிய வண்டுகள் வெளிவரத்தானே செய்யும்.! மதுரை எம்பி சு.வெங்கடேசன் டிவீட்.!
எங்களின் தலைவர்களால் கொன்று வீசப்பட்ட கருத்துக்களை இன்று மீண்டும் ஆளுநர் ரவி தூக்கிக்கொண்டு வருகிறார். – மதுரை எம்பி சு.வெங்கடேசன் ட்வீட்.
காசி தமிழ்ச்சங்கம் நிகழ்வுக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் பேசிய தமிழக ஆளுநர் ரவி , தமிழ்நாட்டை , தமிழகம் என அழைக்க வேண்டும். திராவிட ஆட்சியில் 50 ஆண்டுகளாக மக்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் எதிர்மறையான அரசியல் அணுமுறைகள் இருக்கின்றன என பல்வேறு கருத்துக்களை கூறினார்.
ஆளுநர் ரவியின் கருத்துக்கு பல்வேறு கட்சியினர் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இது குறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடுகையில், தியாகி சங்கரலிங்கனார், அறிஞர் அண்ணா, தோழர் பூபேஷ்குப்தா என்று எங்களின் தலைவர்களால் கொன்று வீசப்பட்ட கருத்துக்களை இன்று மீண்டும் ஆளுநர் ரவி தூக்கிக்கொண்டு வருகிறார். என விமர்சனம் செய்து இருந்தார்.
மேலும் அவர் பதிவிடுகையில், ‘பழைய பிணம் என்றாலும் புதிய வண்டுகள் வெளிவரத்தானே செய்யும்.’ எனவும் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.