இன்று அண்ணாமலை வாய் திறக்க மாட்டார், இன்று மௌன விரதம்..! – காயத்ரி ரகுராம்
ஒரே நாளில் 50 ரூபாய் எரிவாயு விலை உயர்வு. இன்று அண்ணாமலை வாய் திறக்க மாட்டார் என காயத்ரி ரகுராம் ட்வீட்.
இன்று வீட்டு உபயோக சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் 14.2 கிலோ வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ரூ.1068-ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1118.50-ஆக அதிகரித்துள்ளது.
சிலிண்டர் விலை உயர்வையடுத்து, பாஜகவில் இருந்து விலகிய காயத்ரி ரகுராம், ஒரே நாளில் 50 ரூபாய் எரிவாயு விலை உயர்வு. இன்று அண்ணாமலை வாய் திறக்க மாட்டார், இன்று மௌன விரதம்.
அவர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள மாட்டார், சட்டை பில் வாட்ச் பில் காட்ட மாட்டார். அவர் இந்த பிரச்சினையை திசை திருப்ப மாட்டார். சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதுவார்.’ என பதிவிட்டுள்ளார்.
ஒரே நாளில் 50 ரூபாய் எரிவாயு விலை உயர்வு. இன்று அண்ணாமலை வாய் திறக்க மாட்டார், இன்று மௌன விரதம். அவர் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொள்ள மாட்டார், சட்டை பில் வாட்ச் பில் காட்ட மாட்டார். அவர் இந்த பிரச்சினையை திசை திருப்ப மாட்டார். சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு கடிதம் எழுதுவார்.
— Gayathri Raguramm ???????? (@Gayatri_Raguram) March 1, 2023