இன்றும் நாளையும் ‘வெயில்’ வெளுத்து வாங்கும்…வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!

Default Image

தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. 

இன்று நாளை வெயில் அதிகரிக்கும் 

தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.  இதனால் முதியோர். கர்ப்பிணிகள், குழந்தைகள் நண்பகல் 12 முதல் மதியம் 3 மணி வரை வெளியே வர வேண்டாம். இளநீர், மோர், தண்ணீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு 

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்