இன்று இங்கெல்லாம் மளிகை, காய்கறி கடைகளை மாலை 5 மணி வரை திறக்கலாம்
சென்னை,கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் இன்று மட்டும் மாலை 5 மணி வரை மளிகை, காய்கறி கடைகள் திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த 26-ம் தேதி முதல் நேற்று இரவு 9 மணி வரை சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் முழு முடக்கம் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று மட்டும் மளிகை, காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை வரை திறந்திருக்கும் என தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.மே 1-ஆம் தேதி முதல் சென்னை, கோவை, மதுரை மாநகராட்சி வழக்கம் போல காலை 6 மணி முதல் ஒரு மணி வரை கடைகள் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 4 நாள் முழு முடக்கம், நேற்று இரவு முடிந்த நிலையில், இன்று மட்டும் கடைகள் கூடுதல் நேரம் திறந்திருக்க அரசு அனுமதி கொடுத்துள்ள நிலையில் மக்கள் அவசரம் காட்டாமல் மாஸ்க், தனிநபர் இடைவெளியுடன் பொருட்களை வாங்கலாம் என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.