இன்று 19… நவ.17, 18-ல் 10 மாவட்டங்களில் மிக பலத்த மழை எச்சரிக்கை – வானிலை மையம்!
தமிழகத்தில் நவம்பர் 19-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.
தமிழகத்தில் நவ.17, 18-ல் திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, பெரம்பலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 19 மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யக்கூடும்.
இதனிடையே, அந்தமானில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகரும் என்றும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுவதற்கான வாய்ப்பு இல்லை எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.