இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த மூன்று நாட்களாக மாற்றமின்றி விற்பனை செய்யப்பட்ட விலையிலே நீடிக்கிறது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. அந்த வகையில், தமிழகத்தில் கடந்த மாதத்திலிருந்து பல மாவட்டங்களில் பெட்ரோல் விலை ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வந்தது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல், டீசல் விலையானது அதிகரித்து வந்தது வாகன ஓட்டிகளை சிரமத்துக்கு உள்ளாக்குகியது. எப்போதுதான் பெட்ரோல் விலை குறையும் என்று மக்கள் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில், தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பை அடுத்து, பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு நேற்று முன்தினம் காலை முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, சென்னையில் பெட்ரோல் லிட்டர் ரூ.99.47-க்கும் டீசல் லிட்டர் ரூ.94.39-க்கும் விற்பனையானது. இன்று அதைபோல் சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 3-வது நாளாக மாற்றமின்றி அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…