எந்த நாட்டிற்கு? என்ன வேலைக்காக? யார் நிறுவனத்திற்கு? பதிவு செய்க – அமைச்சர்

Default Image

போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடுகளுக்கு சென்று சிக்கித் தவிக்கும் நிலை காணப்படுகின்றது என அமைச்சர் செஞ்சி மஸ்தான் வருத்தம்.

சமீப காலமாக தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாடு செல்பவர்கள் சிக்கி தவித்து வரும் நிலை இருந்து வருகிறது. சமூகவலைத்தளங்களில் வரும் தவறான தகவல், போலி ஏஜெண்டுகள், உணவின்மை உள்ளிட்டவற்றால் பலர் சிக்கியுள்ளனர். இதில் பலரை தமிழக அரசு கவனத்தில் எடுத்து அவர்களை மீட்டு வருகிறது. நல்ல சம்பளத்துடன் வேலை கொடுப்பதாக சமூக வலைத்தளங்களில் வந்த தகவலை நம்பி பலர்காவன குறைவால் பலர் மாட்டிக்கொள்கிறார்கள்.

இதனால் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக அழைத்துச் சென்று சைபர் குற்றங்களில் ஈடுபட வைக்கும் கும்பலிடமிருந்து உஷாராக இருக்க வேண்டுமென தமிழக அரசும், காவல் துறையும் அறிவுரை வழங்கி வருகிறது. இந்த நிலையில், எந்த நாட்டிற்கு? என்ன வேலைக்காக? யார் நிறுவனத்திற்கு? செல்கிறீர்கள் என்பதை பதிவு செய்ய வேண்டும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அமைச்சர், பதிவு செய்துவிட்டுச் சென்றால் அரசு கண்காணித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கும். போலி ஏஜெண்டுகளை நம்பி வெளிநாடுகளுக்கு சென்று சிக்கித்தவிக்கும் நிலை காணப்படுகின்றது. அப்படி சிக்கித்தவிப்பவர்களை உடனுக்குடன் மீட்டு வருகிறோம். 35 பேர் குவைத் நாட்டில் கட்டுமானப்பணிக்கு சென்ற நிலையில், உணவு, வேலை கிடைக்காமல் அவதிப்பட்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார். மேலும், பல்வேறு நாடுகளில் அரசு துறை மூலமாக வேலைக்கு அனுப்பும் பணி நடைபெறுகிறது என்றும் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்