கிரிக்கெட் பார்க்க, சென்னையில் இன்று மெட்ரோ சார்பில் இலவசபஸ் வசதி.!
இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3-வது ஒருநாள் போட்டியை முன்னிட்டு சென்னையில் இன்று இலவச மினிபஸ் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது ஒருநாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறுகிறது. சென்னையில் 3 வருடங்கள் கழித்து இந்த போட்டி நடைபெறுவதால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் நடைபெறும் இந்த போட்டியை மைதானத்தில் கண்டுகளிக்கும் ரசிகர்களுக்கு இலவச மினிபஸ் வசதி மெட்ரோ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிற்பகல் 1.30 மணிக்கு போட்டி நடைபெறுவதால் அதனை முன்னிட்டு அரசினர் தோட்டம் முதல் சேப்பாக்கம் வரை காலை 11 மணி முதல் இரவு போட்டி முடியும் வரை மெட்ரோ சார்பில் இலவச மினிபஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் இரவு 10 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.