விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடானது தற்போது பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு வருகை தந்த கட்சி தலைவர் விஜய் கொடியேற்றி மாநாட்டைத் தொடங்கினார். அதன்பிறகு, கட்சியின் இரண்டாவது பாடலும் மாநாட்டில் வைத்து வெளியிடப்பட்டது.
இந்த பாடல் தொண்டர்கள் வேண்டுகோளுக்கு இணங்க 2 முறை மாநாட்டில் ஒலிக்கப்பட்டது. பாடலில் இடம்பெற்ற வரிகள் அனைத்தும் தொண்டர்களுக்கு உணர்வுப்பூர்வமாக இருந்தது என்றே சொல்லலாம். ஏற்கனவே, மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு காமராஜர், அம்பேத்கார், பெரியார், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் ஆகியோருடைய விஜய் பேனர் வைக்கப்பட்டிருந்தது.
அவர்களுடைய பேனர் வைத்தது மட்டுமில்லாமல் அவர்களுடைய கொள்களைளையும் தான் கடைப்பிடிப்பேன், கட்சியின் கொள்கைகளும் அது தான் என விஜய் தற்போது வெளியாகி இருக்கும் இரண்டாவது பாட்டிலும் மக்களுக்குக் கூறியிருக்கிறார். அதாவது பாடலில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், வேலுநாச்சியார், அஞ்சலையம்மாள் வழியில் நடக்க.. “நான் வரேன்” என விஜய் பேசியிருந்தார்.
விஜய் இப்படி பேசியது பாடல் மூலம் ஒலிக்கப்பட்ட நிலையில், தலைவர் விஜயின் உணர்வுப்பூர்வமான இந்த வார்த்தையைப் பார்த்து தொண்டர்கள் சற்று கண்கலங்கினார்கள். மேலும், அந்த பாடலில் வரிகள் மட்டும் இல்லாமல் பெரியார், அஞ்சலை அம்மாள் உள்ளிட்டோர் விஜய் கையைப்பிடித்து அழைத்து வருவதுபோல காட்சிகளும் இடம்பெற்று இருக்கிறது.
சென்னை : ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 5ஆவது நாளாக அதிகரித்துள்ளதால், நகை பிரியர்கள் சோகத்தில் உள்ளனர். கடந்த 4…
சென்னை : ரஜினிகாந்தை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது தற்போதைய அரசியல்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு இருவரும் விவாகரத்து செய்வதாக பேசி முடிவெடுத்து அறிவித்த நிலையில், இது ரசிகர்களுக்கு…
ரஷ்யா : உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில், உக்ரைன் புது…
சென்னை : தனுஷ் இயக்கி, நடித்து வரும் 'இட்லி கடை' படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரனின் இல்லத் திருமண நிகழ்ச்சி…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று இரவு 7 மணிக்கு கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த…