த.வெ.க மாநாட்டிற்கு செல்வோர் கவனத்திற்கு! இதற்கெல்லாம் அனுமதி இல்லை!
தவெக மாநாட்டில் எந்தெந்த பொருட்களை எடுத்து செல்லக்கூடாது, என தவெக தரப்பில் பேனர் வைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் : தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடு கட்சித் தலைவர் விஜய் தலைமையில் நாளை பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. கட்சியின் முதல் மாநாடு இது என்பதால் தமிழகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்குப் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. எந்த அளவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது என்பது பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.
குடிக்கத் தண்ணீர் வசதியிலிருந்து செல்போன் பேச டவர் வசதி வரை பெரிய பெரிய வசதிகள் செய்யப்பட்டு இருக்கிறது, ஏற்பாடுகள் பிரமாண்டமாகச் செய்யப்பட்டு இருக்கும் நிலையில், மாநாட்டுக்கு வருகை தரும் மக்கள் பாதுகாப்பாக வரவேண்டும் என்பது தான் கட்சித் தலைவர் விஜயின் பெரிய ஆசையாக இருக்கிறது.
எனவே, இருசக்கர வாகனப் பயணத்தைத் தவிர்த்தல் நன்று. உங்கள் பாதுகாப்புக் கருதியே இதைச் சொல்கிறேன். அதேபோல, வருகிற வழிகளில் பொதுமக்களுக்கோ போக்குவரத்திற்கோ இடையூறு செய்யாமல் வரவேண்டும். போக்குவரத்து நெறிமுறைகளில் கவனம் செலுத்துவதோடு, மாநாட்டுப் பணிக்கானக் கழகத் தன்னார்வலர்கள் மற்றும் தனியார் பாதுகாவல் படைக்கு ஒத்துழைப்பு நல்குவதோடு, மாநாடு சார்ந்து காவல்துறையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்” தனது தொண்டர்களுக்கு அறிவுரையையும் வழங்கி இருந்தார்.
இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து தவெக மாநாட்டில் எந்தெந்த பொருட்களை கொண்டு வரக்கூடாது என்பதற்கான பேனர் ஒன்று விஜய் போட்ட உத்தரவின் படி மாநாடு வாசலில் வைக்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் பின் வருமாறு…
- செல்பி ஸ்டிக் முக்கியமாக கொண்டு வரக்கூடாது. அது கொண்டு வர அனுமதி இல்லை.
- மது அருந்திவிட்டு வருபவர்களுக்கு மாநாட்டில் அனுமதில் இல்லை. எனவே, மது அருந்திவிட்டு வரக்கூடாது.
- வீடியோக்கள் எடுப்பதற்கு அனுமதிகிடையாது. அதைப்போல ட்ரோன் கேமராக்களும் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை.
- அதைப்போல, கட்சி பாதை எதுவும் கொண்டு வரக்கூடாது. கண்ணாடியால் செய்த எந்த பொருட்களும் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை.
- அதைப்போல, கையில் எந்த ஆயுதங்களும் கொண்டு வரக்கூடாது. வெடிபொருட்கள் கொண்டு வரக்கூடாது.
- மற்றகட்சி கொடிகள் எதுவும் எடுத்துவரக்கூடாது. முக்கியமாக விலங்குங்கள் கொண்டு வரக்கூடாது.
- சைக்கிள் மட்டும் இரு சக்கர வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது.
- சட்டவிரோதமான பொருட்கள் கொண்டு வரக்கூடாது.
என மாநாட்டுக்கு வருகை தருபவர்களுக்கு பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றி தான் மாநாட்டுக்கு வரவேண்டும் என இதன் மூலம் தெரிகிறது.