ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் -மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் வைகோ
- 2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- மதிமுக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
2019 ஆம் ஆண்டுக்கான மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு கட்சிகள் தேர்தலுக்கான தீவிர செயற்பாட்டில் இறங்கியுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக கட்சிகள் கூடுதல் தீவிரம் காட்டி வருகின்றது.
இந்நிலையில், அதிமுக -திமுக இருபெரும் கட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்காண தொகுதிகள் பெயர்களை பட்டியலிட்டு வெளியிடப்பட்டன.
இதில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவிற்கு ஈரோடு தொகுதி வழங்கப்பட்டது. மதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான வைகோ தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்தார்.அதன்படி ஈரோடு மக்களவைத் தொகுதியில் மதிமுக சார்பில் கணேசமூர்த்தி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மக்களவை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டார்.அதில்,
- பூரண மதுவிலக்கு கொண்டு வரவேண்டும்.
- பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்ய வேண்டும்.
- அணு உலை பூங்காவை கைவிட வேண்டும்.
- ஸ்டெர்லைட் ஆலையை அகற்ற வேண்டும் .
- மின்சார சட்ட திருத்த முன்வடிவு 2018-யை திரும்பபெற வேண்டும்.
- இணையதள வணிகத்திற்கு தடை, நியூட்ரினோ திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும்.
- சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட வேண்டும் என்று மதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.