மின்சாரக் கட்டணத்தை 2 மாத காலத்திற்கு ரத்து செய்ய வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் மற்றும் முழு ஊரடங்கு காரணமாக தாழ்வழுத்த மின்நுகர்வோர்களின் மின் கட்டணம், இதர நிலுவை தொகை செலுத்த வரும் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் நேற்று முதல் 24ம் தேதி வரை இருந்த நிலையில், தற்போது மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கொரோனா முதல் அலையையொட்டி கடந்த ஆண்டில் போடப்பட்ட ஊரடங்கு காரணமாக பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களும், தொழில்துறையினரும் மீண்டுவர முடியாத நிலை உள்ளது.
தற்போது கொரோனா 2ம் அலை பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமலில் உள்ள முழு ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் வேலையிழப்பு, வருமானம் இழப்பு, தொழில்முடக்கம் போன்றவற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டு, பொதுமக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த பேரிடம் காலத்தில் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான துயர்துடைப்பு உதவிகளை வழங்கும் திட்டங்களை செயல்படுத்து உறுதுணையாக இருக்க வேண்டியது அரசின் தலையாய கடமையாகும். ஏற்கனவே, அண்டை மாநிலமான கேரளத்தில் மக்கள் படுகின்ற இன்னல்களை உணர்ந்து, குடிநீர் மற்றும் மின்சார கட்டணத்தை இரண்டு மாதங்களுக்கு ரத்து செய்துள்ளது.
ஆகவே, ஊரடங்கால் முற்றாக வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் மக்களின் பெருஞ்சுமையைக் குறைக்க, மின்சாரக் கட்டணத்தை இரண்டுமாத காலத்திற்கு முழுமையாக ரத்து செய்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு குறைந்தபட்ச ஆறுதலை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…