1000 கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக் காக்க? பதில் சொல்லுங்கள் பிரதமரே – கமல்ஹாசன்

பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
டெல்லியில் உள்ள நாடாளுமன்றம் கட்டிடம் போதுமான வசதி மற்றும் வரும் காலங்களில் இடங்கள் அதிகரிப்பதால் புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.971 கோடி செலவில் கட்டப்படும் இந்த கட்டிடம் 2022-ம் ஆண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்று கூறப்படுகிறது. கடந்த 10-ஆம் தேதி இந்த புதிய கட்டிடத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
புதிய கட்டிடத்திற்க்கான ஒப்பந்தம் டாடா லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. முக்கோண வடிவில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது. கலைநயம், எரிசக்தி சேமிப்பு, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்களுடன் புதிய நாடாளுமன்றம் அமைகிறது. ஒரே நேரத்தில் ஆயிரத்து 1,224 பேர் அமரும் வகையில் புதிய நாடாளுமன்றம் அமைய உள்ளது.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், சீனப் பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில், ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க? பதில் சொல்லுங்கள் என் மாண்புமிகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரே என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சீனப்பெருஞ்சுவர் கட்டும் பணியில் ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து போனார்கள். மக்களைக் காக்கத்தான் இந்தச் சுவர் என்றார்கள் மன்னர்கள். கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து பாதி இந்தியா பட்டினி கிடக்கையில்,ஆயிரம் கோடியில் பாராளுமன்றம் கட்டுவது யாரைக்காக்க?
(1/2)— Kamal Haasan (@ikamalhaasan) December 13, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025