சென்னை மாவட்ட மற்றும் மண்டல அளவிலான பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன என தேர்தல் அலுவலர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை மாவட்ட தேர்தல் அலுவலர் / ஆணையர் பிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகின்ற 06.04.2021 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் உள்ளடக்கிய 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
சென்னை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக மதுபானங்கள் கடத்தலுக்கு எதிரான புகார்கள், தினசரி விற்பனையை கண்காணித்தல், மொத்தமாக கொண்டு செல்வதை தடுத்தல், அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டும் கடைகள் செயல்படுவதை கண்காணித்தல், கொரோனா வைரஸ் தொற்று குறித்து அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட அளவிலான பறக்கும் படை குழு மண்டல அளவிலான பறக்கும் படை குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
எனவே, தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணாக மதுபானங்கள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 1900-425-7012 என்ற எண்ணிலும், மேற்குறிப்பிட்டுள்ள அதிகாரிகளின் கைபேசி எண்ணிற்கும் தெரிவிக்கலாம் என ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
கலிபோர்னியா : மொபைல் பயனர்கள் பாதுகாப்பாக ஒரு ஆப்-ஐ பதிவிறக்கம் செய்ய நம்பிக்கை மிக்க தளமாக உள்ளது கூகுள் பிளே…
சென்னை : 2026-ல் மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த தொகுதி மறுசீரமைப்பில்…
சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை…
உத்தர பிரதேசம்: இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை தடுக்க மத்திய,…
சென்னை : நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பாக, நாளை நடைபெறும் கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக, கேரள முதலமைச்சர்…
பாட்னா : பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த செபக்தக்ரா உலகக் கோப்பை தொடக்க விழாவில்,தேசிய கீதம் இசைக்கப்படும்போது…