குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் – விஜயகாந்த்
குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என விஜயகாந்த் வேண்டுகோள்.
சென்னை திருவொற்றியூர் அரிவாக்குளத்தில் இருக்கும் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு, கடந்த 28 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில், மொத்தம் 336 அடிக்குமாடி வீடுகள், நான்கு பிளாக்குகளாக உள்ளன. அவற்றில் டி பிளாக்கில் 24 வீடுகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட குடும்பங்களும் வசித்து வருகின்றனர். இடிந்து விழுந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,. ‘குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் முடிவில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அதனை முன்கூட்டியே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என தெரிவித்துள்ளார்.
குடிசை மாற்று வாரியம் சார்பில் கட்டப்பட்டுள்ள பழைய கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வின் முடிவில் இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடங்களை கண்டறிந்து அதனை முன்கூட்டியே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். pic.twitter.com/pCc61XB0pP
— Vijayakant (@iVijayakant) December 28, 2021