பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; ஆளுநர் ஆர்.என்.ரவி.!
பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க ஆளுநர் வலியுறுத்தல்.
பல்கலைக்கழக துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்திருக்கிறார். துணைவேந்தர்கள் இல்லாமல் சில பல்கலைக்கழகங்களில் பணிகள் நடைபெறுவது தாமதமாகி வருவதால் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப ஆளுநர், வலியுறுத்தி கூறியிருக்கிறார்.
சென்னையில் பல்கலைக்கழக நிர்வாகிகள் சந்திப்பில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி இவ்வாறு கூறியுள்ளார். மேலும் ஆளுநர் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், சிண்டிகேட், செனட் உள்ளிட்ட பல்கலைக்கழக நிர்வாக அமைப்பு சார்ந்த கூட்டங்கள் பல்கலைக் கழகங்களில் நடைபெறவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் காலியாக இருக்கும் துணை வேந்தர்களின் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கவேண்டும், பல்கலைக்கழக துணை வேந்தர்களுக்கு நடத்தப்படும் தேர்வுமுறை யுஜிசி விதிமுறைக்கு உட்பட்டு நடக்கவேண்டும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.