கட்சி வீணாவதை ஒரு நிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்.
சசிகலா அவர்கள் சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை சென்று, வெளியே வந்த அவர் தீவிர அரசியலில் ஈடுபடுவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் சில நாட்களுக்கு பின்பு தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என்றும் அறிவித்தார். இதற்கிடையில் சமீப நாட்களாக அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உடன் அலைபேசி வாயிலாக பேசிவரும் ஆடியோக்கள் வெளியாகி வந்தது.
இந்நிலையில், இவர் அவ்வப்போது அம்மாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது எம்ஜிஆர் இதழிலும் தொண்டர்களுக்கு கடிதம் எழுதி வந்தார். அந்த வகையில் இன்று எல்லாரும் நாம் பிள்ளைகள் தான் என்ற தலைப்பில் சசிகலா தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ‘கட்சி வீணாவதை ஒரு நிமிடம் கூட கட்சியை வளர்த்த நம்மால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன். எல்லாரும் அஇஅதிமுக பிள்ளைகள்தான். புரட்சித்தலைவர் எப்போதுமே கட்சி வித்தியாசமே பார்க்க மாட்டார். அவர்களா? இவர்களா? என்றெல்லாம் பார்க்க மாட்டார். அதையெல்லாம் பார்த்து தான் வளர்ந்து வருகிறோம்.
என்னைப் பொருத்தவரை எல்லாரும் ஒன்று தான் எல்லாருமே நம் பிள்ளைகள்தான். அதிமுக என்பது தொண்டர்களின் இயக்கம். அதனை எப்போதும் தொண்டர்கள் நிரூபித்துக் காட்டுவார்கள். கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் தொண்டர்களிடம் ஒரு தாய் போல் அனுசரணையாக இருந்து காப்பாற்ற வேண்டும். இப்போது அதுபோன்ற சூழ்நிலை இல்லை. விரைவில் வருகிறேன், எல்லோரையும் சந்திக்கிறேன், கவலைப்படாதீர்கள்.
அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் வரும் 16-ம் தேதியில் சசிகலா மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்திற்கும், 17ஆம் தேதி எம்ஜிஆரின் நினைவு இல்லத்திற்கும் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…
சென்னை : இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பெயர் தான் தற்போது ட்ரென்டிங் டாப்பிக்கில் இருந்து வருகிறது. அதற்கு முக்கியமான காரணமே அவரும்,…