அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்களில் கூடாது..நடந்து சென்று தான் வாங்க வேண்டும்.!
அத்தியாவசிய பொருட்கள் வாங்க நடந்து சென்று தான் வாங்க வேண்டும்.
மதுரையில் நாளை நள்ளிரவு முதல் வரும் 30-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் காய்கறி, பலசரக்கு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6 மணிமுதல் மதியம் 2 மணிவரை கடைகள் இயங்கும் எனவும், ஞாயிற்றுக்கிழமைகளில் பால் மற்றும் மருந்து கடைகளை தவிர்த்து அனைத்து கடைகள் மூடப்படும்.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் வாங்க வாகனங்கள் பயன்படுத்தகூடாது 1 கிலோமீட்டர் தூரத்திற்குள்ளாவாகவே மட்டுமே நடந்து சென்று வாங்க வேண்டும்.