பாரம்பரிய சுற்றுச்சூழல் பூங்காவாக அறிவிக்க வேண்டும் -மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் கோரிக்கை
பாரம்பரிய சுற்றுச்சூழல் பூங்காவாக அறிவிக்க வேண்டும் என்று திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் 14- ஆம் தேதி முதல் தொடங்கி விடுமுறையின்றி அக்டோபர் 1-ஆம் தேதிவரை நடைபெறும் எனவும், கொரோனா வைரஸ் சூழலைக் கருத்தில் கொண்டு நாடாளுமன்றக் கூட்டம் காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரையும், பின்னர் மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.அதன்படி நடைபெற்று வருகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்.
இந்நிலையில் மக்களவையில் திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் பேசினார்.அவர் பேசுகையில், ”வேளச்சேரி ஏரியை முறையாக பராமரிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை வைத்தும் அதிமுக அரசு செவிசாய்க்கவில்லை. எனவே, அப்பகுதியை பாரம்பரிய சுற்றுச்சூழல் பூங்காவாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.