இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் 06/03/2019 புதன் அன்று அதிமுக சார்பில் நடத்தப்பட்ட பாஜக தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் பொதுக்கூட்டத்தில் மோடியின் முன்னிலையில் பேசிய தமிழகத்தின் துணை முதல்வர் திரு. ஓ.பன்னீர் செல்வம் அவர்கள்..,
பாஜகவுடன் கூட்டணி வைப்பது மத சார்பின்மைக்கு எதிரானது என்பது அரசியல் பச்சோந்திகளின் தவறான பிரச்சாரம் என்றும், கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் இந்திய நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக எங்குமே சிறு அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும் சிறுபான்மையினரை மோடியின் அரசு அந்த அளவிற்கு பாதுகாத்துள்ளது என்றும் பேசியுள்ளார்.
சிறுபான்மையினருக்கு எதிராக கடந்த 5 ஆண்டுகளில் படுபாதகம் செய்து வந்த மோடி அரசு சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இஸ்லாமியர்களுக்கு எதிராக எந்த சிறு அசம்பாவிதங்களும் நடக்கவில்லை என்று சொல்லியிருக்கும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் பேச்சுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கடும் கண்டனத்தை பதிவு செய்கின்றது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…