ஃபானி புயலின் தாக்கத்தால் தமிழகத்தில் அனல்காற்று வீசும்! வெப்பம் அதிகரிக்கும்!
வாங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஃபானி புயலாக வலுப்பெற்று ஒடிசாவை சூறையாடி சென்றது. அவ்வாறு கரையை கடக்கும் போது தமிழகத்திற்கு மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துப்போய், புயல் கரையை கடக்கும் போது, இங்குள்ள ஈரப்பத காற்றையும் ஈர்த்துவிட்டு சென்றதால் இங்கு மழைக்கு வாய்ப்பில்ல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தில் அனல்காற்று வீசி, வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும் என கூறப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் வேறு இருப்பதால் மக்கள் வெயிலில் நடமாடவே பயப்படுகின்றனர்.
இருந்தாலும் ஒரு சில கடலோர பகுதிகளில் மிதமான ஈர காற்று வீசும் எனவும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்படுகிறது. சென்னையில் இன்று வெயில் 36 டிகிரி செல்ஸியஸை தாண்டும் என கூறப்பட்டுளள்து.
DIANSUVADU