நிலுவை தொகை வழங்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு : வழக்கு பிற்பகல் ஒத்திவைப்பு
அரசு போக்குவரத்து ஊழியர்கள் இன்று 5 வது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.
இதனை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரித்த தலைமை நீதிபதி கூறுகையில், இந்த போக்குவரத்து வேலைநிறுத்த போராட்டத்தால் மிகவும் அதிகமாக பாதிக்கப்பட்டது பொதுமக்கள் தான். எனவும், தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் பொதுமக்களும், பள்ளிமாணவர்களும் தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர்.
ஊழியர்களின் போராட்டம் என்னையும், சொகுசு கார்களில் வரும் அமைச்சர்களையோ பாதிக்க வில்லை. பொதுமக்களை மட்டும் தான் பாதித்துள்ளது எனவும் கூறினார். மேலும் இத்தனை நாள் ஏன் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிரபித்துள்ளது.
தொழிற்சங்கங்கள் தரப்பில், பிடித்தம் செய்த தொகை மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி என கூறினார்.
தமிழக அரசு சார்பில் கூறும்போது, ஓய்வூதிய நிலுவைத்தொகை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை இன்று பிற்பகல் 2.30 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
source : dinasuvadu.com