அரசுப் பேருந்துகளில் 10% கட்டண சலுகை பெறுவது எப்படி.? வழிமுறைகள் இதோ…
சென்னை: தமிழக அரசு பேருந்துகளில் இருவழி பயண முறைகளில் 10 சதவீத கட்டண சலுகை அளிக்கப்படுகிறது என தமிழக போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
தமிழக அரசு பேருந்துகளில் பயணிகளின் வருகையை அதிகரிக்கும் வண்ணம், பயணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக புதிய சலுகைகளை தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த சலுகையை அரசு பேருந்துகளில் இருவழி பயணம் மேற்கொள்ளும் பயனர்களுக்கு மட்டும் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்துத்துறையின் இந்த சலுகையை ஆன்லைன் வாயிலாக மட்டுமே பெற்றுக்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் புறப்படும் டிக்கெட் மற்றும் அங்கிருந்து மீண்டும் திரும்பி வரும் டிக்கெட் ஆகியவற்றை பதிவுசெய்து புக் செய்ய வேண்டும்.அவ்வாறு புக் செய்து இறுதியில் பணம் செலுத்துகையில் 10 சதவீத கட்டண சலுகையை பெற முடியும்.
முதலில், பயனாளர் தனது செல்போன் அல்லது மென்பொருள் இயங்குதளத்தில் TNSTC எனும் அரசு போக்குவரத்து கழக செயலியில் உள்நுழைய வேண்டும்.
பின்னர் அதிலில், முன்னோக்கி பயணம் என்பதில் புறப்படும் இடம் , சேரும் இடம், தேதி, எத்தனை பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என மற்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
பின்னர், திரும்பும் பயணம் எனும் தேர்வை கிளிக் செய்து அதில், திரும்ப வரும் தேதியை உள்ளீடு செய்ய வேண்டும்.
பின்னர், டிக்கெட் விலை, சாதரண வகை பேருந்து, ஏசி வகை பேருந்து எனும் பயனர்களுக்கு விருப்பமான பேருந்தை கிளிக் செய்ய வேண்டும். அதே போல திரும்ப வருவதற்கான பேருந்தையும் கிளிக் செய்ய வேண்டும்.
இறுதியில் கட்டணம் செலுத்தும் பக்கம் வருகையில் கட்டண சலுகையை தேர்வு செய்து 10 சதவீத பயண கட்டணத்தை பெயர்கள் பெற்றுக்கொள்ளலாம்.
குறைந்தபட்சம் 5 முறை TNSTC செயலி வழியாக பயண டிக்கெட் புக் செய்திருந்தால் மட்டுமே 10 சதவீத கட்டண சலுகை கிடைக்கும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக வார இறுதி நாட்களில், பயணம் செய்யும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் போக்குவரத்து துறை பரிசு அளிக்கவும் திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.