#TNPSC:இன்றே கடைசி நாள் – குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க லிங்க் உள்ளே!

Published by
Edison

தமிழகத்தில் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளிட்ட 7,382 இடங்களை நிரப்ப ஜூலை 24-ல் குரூப் 4 தேர்வு நடைபெறவுள்ளது. இத்தேர்வினை எழுத கடந்த மார்ச் 30 முதல் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்.

இதனிடையே,TNPSC தலைவர் பாலசந்திரன் கூறியதாவது:”மார்ச் 30 முதல் https://www.tnpsc.gov.in/  என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் ஏப்ரல் 28-ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.ஜூலை 24-ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை குரூப் 4 தேர்வு நடைபெறும் .மேலும், குரூப் 4 தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 90 மதிப்பெண்களுக்கு மேல் பெறுபவர்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.அக்டோபர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும்”,என்று அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து பேசிய டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன்,”TNPSC தேர்வுகளில் முறைகேடு நடப்பதற்கு வாய்ப்பில்லை.முறைகேடைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.இந்தமுறை குரூப் 4 தேர்வுக்கு 25 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மேலும்,7,382 பணியிடங்களுக்கு நடைபெறும் குரூப் 4 தேர்வில் 81 பணியிடங்கள் ஸ்போர்ட்ஸ் கோட்டா மூலம் நிரப்பப்படும் எனவும்,

விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதும் மையங்களை இனிமேல் டிஎன்பிஎஸ்சியே தேர்வு செய்யும். 2019-க்கு முன் தேர்வு மையம் விண்ணப்பத்தார்களால் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுளார்.மேலும்,இனி அனைத்து வித அரசு பணிகளுக்கும்,TNPSC தான் தேர்வை நடத்தும் என்றும் அரசாணை வெளியிடப்பட்ட பின், வேறு யாரும் பணி நியமனம் மேற்கொள்ள முடியாது” எனவும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து,ஜூலை 24-ஆம் தேதி நடைபெறவுள்ள குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 17.83 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

இந்நிலையில்,குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே (ஏப்ரல் 28-ம் தேதி) கடைசி நாளாகும்.எனவே,இதுவரை இத்தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்று நள்ளிரவுக்குள் விண்ணப்பிக்குமாறு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Recent Posts

தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?

தொடர் தோல்வி..கடும் அப்செட்டில் ருதுராஜ்! ராஜஸ்தான் போட்டிக்கு பின் பேசியது என்ன?

குவஹாத்தி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியும், ராஜஸ்தான் அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற…

19 minutes ago

Live : ரமலான் பண்டிகை கொண்டாட்டம் முதல்…மியான்மரில் பயங்கர நிலநடுக்கம் வரை!

சென்னை : தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் ரமலான் பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று பிறை தெரிந்த நிலையில், இன்று ரமலான்…

1 hour ago

குட் பேட் அக்லி படத்தில் எமோஷனல் இருக்கு! ரசிகர்கள் தலையில் குண்டை தூக்கிப்போட்ட ஆதிக்!

சென்னை : தமிழ் சினிமா மட்டுமின்றி இப்போது இந்திய சினிமா வரை அனைவருடைய கவனம் முழுவதும் அஜித் நடிப்பில் உருவாகி வரும்…

2 hours ago

தோனி இருக்கும்போது சென்னையை கட்டுப்படுத்திட்டாரு! ரியான் பராக்கை புகழ்ந்த சுரேஷ் ரெய்னா!

குவஹாத்தி : நேற்று (மார்ச் 30)நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை…

2 hours ago

மியான்மரில் பயங்கர நிலநடுக்கம்! பலி எண்ணிக்கை 1,700 உயர்வு!

பாங்காக் : மியான்மரில் மார்ச் 28, 2025 அன்று பிற்பகல் 12:50 மணியளவில் (மியான்மர் நேரம், MMT) 7.7 ரிக்டர்…

3 hours ago

பாஜக அரசு தீட்டும் சதிதிட்டங்கள்…கடுமையாக விமர்சித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் பணியாற்றிய…

3 hours ago