10-ம் வகுப்பு முடித்திருந்தால் போதும் சிறைத்துறையில் வேலை வாய்ப்பு.! TNPSC அறிவிப்பு.!

Default Image

தமிழ்நாட்டின் சிறைத்துறையில் காலியாக உள்ள 59 உதவி ஜெயிலர் பணியிடங்களை நிரப்ப, வரும் ஜூலை 1ம் தேதி அன்று எழுத்துத்தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது.

அதில், ஆண்கள் பணியிடங்கள் – 54

பெண்கள் பணியிடங்கள் – 5 என கொடுக்கப்பட்டுள்ளது.

தகுதியானவர்கள் மே 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் tnpscexams.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு சிறைத்துறை விண்ணப்ப கட்டணம்:

Registration Fee  – ரூ.150
Examination Fee  – ரூ.100

சம்பள விவரம்:

உதவி ஜெயிலர் (ASSISTANT JAILOR) பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,400 முதல் ரூ.1,30,400 வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

10 மற்றும் 12 வகுப்பு அல்லது இளங்கலை பட்டப் படிப்பு, இதில் ஏதேனும் படித்திருந்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும்  உடற்தகுதி தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் விவரங்களுக்கு  https://tnpsc.gov.in/Document/english/09_23_Asst_Jailor_ENG.pdfஎன்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்