டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறளை சேர்த்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி (TNPSC) அறிவிக்கை செய்யப்படும் அனைத்துப் போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழித்தாள் கட்டாயமாக்கப்பட்டு,தமிழ் மொழியில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்த நிலையில், அதன் அடிப்படையிலான பாடத்திட்டம், மாதிரி வினாத்தாள் TNPSC இணையதளத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இவ்வாறு இருக்க,டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட குரூப் 2 (Group II Main) பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறள் பகுதி நீக்கம் செய்யப்பட்டது.கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம் பெற்றிருந்தது.ஆனால்,நேற்று வெளியிடப்பட்ட புதிய பாடத்திட்டத்தில் திருக்குறள் இடம்பெறவில்லை என்பது மாணவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில்,டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு பாடத்திட்டத்தில் மீண்டும் திருக்குறளை சேர்த்து டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புகார்கள் எழுந்த நிலையில்,திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் என்ற பகுதி குரூப் 2 முதன்மை தேர்வு பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது.
மேலும்,பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாய தமிழ் மொழித் தகுதி தேர்வு அறிவிக்கப்பட்ட நிலையில்,அதற்கான தேர்வுத் திட்டம்,பாடத்திட்டம் உள்ளிட்டவை https://www.tnpsc.gov.in/ என்ற டிஎன்பிஎஸ்சி நிர்வாகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…