டி.என்.பி.எஸ்சி குரூப் 4 தேர்வு.. மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த .. ராமேஸ்வரம் மையத்தில் எழுதியவர்..முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக உத்தரவு..
- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வில் முறைகேடு விவகாரம்.
- தமிழ்நாடு அளவில் முதலிடம் பிடித்த, சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவரிடம், விசாரணை நடத்த, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் பெரியகண்ணனுாரைச் சேர்ந்தவர் திருவராஜ், இவரது வயது 46, இவர் அப்பகுதியில் ஆடுகள் மேய்த்து வருகிறார். இவர் 2012ம் ஆண்டில் இருந்து,இதுவரை ஏழு முறை, குரூப் 4 தேர்வு எழுதியுள்ளார். இந்நிலையில் கடந்த முறை நடந்த, கிராம நிர்வாக அலுவலருக்கான தேர்வு எழுதிய இவர், மாநில அளவில் முதலிடம் பிடித்தார். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வெழுதிய தேர்வர்களில் அதிகமானோர் இந்த பகுதியிலிருந்து தேர்வானது பெரும் சந்தேகத்திற்க்கு உள்ளாக்கியது.
இதையடுத்து, அந்த தேர்வு மையங்களில் தேர்ச்சி பெற்ற, 35 பேரையும், ஜனவரி 13ம் தேதி அதாவது வரும் திங்கள் கிழமை விசாரணைக்கு நேரில் ஆஜராக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அழைப்பு விடுத்துள்ளது. இதில், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வெழுதிய திருவராஜ்க்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து, திருவராஜ் கூறுகையில், ”விசாரணையில் நான் குற்றமற்றவன் என நிரூபிக்க தயார்.நான் கடும் உழைப்பின் மூலம் இந்த முதலிடத்தை பெற்றேன்.வேண்டுமானால் நான் மீண்டும் தேர்வு எழுதவும் தயாராக உள்ளேன். சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவன் என்றால் வெற்றி பெறக் கூடாதா,” என்றார். இந்த விவகாரம் தமிழகத்தையே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மீது நம்பகத்தன்மையை சந்தேகக்கண்ணுடன் பார்க்க வைத்துள்ளது.