டிஎன்பிஎஸ்சி குரூப் 4 முறைகேடு.. சூடு பிடிக்கும் விசாரனை.. 40 பேரை நேரில் ஆஜராக உத்தரவு.. உண்மை வெளிவருமா..
- தமிழக இளைஞர்களின் அரசு வேலை எங்கிற கனவை நனவாக்குவது தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆகும்.
- இதில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க நேரில் ஆஜராக உத்தரவு.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் என்ற ஒன்றை நம்பியே பல லட்சக்கணக்கான இளைஞர்கள் தங்களை தயார்படுத்திவருகின்றனர். இந்நிலையில் இந்த தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த முரைகேடு குறித்து விசாரிக்க தற்போது இறங்கியுள்ளது தேர்வாணையம். எனவே முறைகேடு நடந்ததாக கூறப்படும் குரூப்-4 தேர்வில் மாநில அளவில் 40 இடங்களை பிடித்தவர்களை டிஎன்பிஎஸ்சி விசாரணைக்கு அழைத்துள்ளது. எனவே வரும் திங்கள் கிழமை சந்தேகத்திற்குரிய முதல் 40 நபர்களும் விசாரணைக்காக சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த குரூப்-4 முறைகேடு குறித்து அனைத்து இடங்களிலும் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது நம்பகத்தன்மையை நிரூபித்து லட்சக்கணக்கான இளைஞர்களின் வாழ்வை வசந்தமாக்க வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.