மிக்ஜாம்  புயல் எச்சரிக்கை.! டி.என்.பி.எஸ்.சி தேர்வுகள் ஒத்திவைப்பு.!

TNPSC Exams are Postpaned for Michaung Cyclone

வங்கக்கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக வடதமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புயல் கரையை கடக்கும் என கூறப்பட்ட சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் அதீத கனமழை பெய்ய ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு என  3 மாவட்டத்திற்கும் நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு என 4 மாவட்டங்களிலும் அதீத கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதனால் நிர்வாக காரணங்களுக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

நெருங்கும் புயல்.! விபத்துக்கள் – அபாயம்.! பொதுமக்களுக்கு அரசின் கடும் கட்டுப்பாடுகள்…

நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை மறுநாள் புயல் கரையை கடக்கும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது டிஎன்பிஎஸ்சி நேர்முகத்தேர்வு தேதியும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கால்நடை மருத்துவர்களுக்கான தேர்வு முன்னதாக முடிவடைந்து கடந்த நவம்பர் மாதம் முதல் நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது. அதே போல் நாளை டிசம்பர் 4 மற்றும் டிசம்பர் 6ஆம் தேதிகளில் நேர்முக தேர்வானது சென்னை பாரிமுனை டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில்  நடைபெற இருந்தது.

இந்த நேர்முக தேர்வு தேதிகள் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளன. நாளை டிசம்பர் 4ஆம் தேதி நடைபெற இருந்த நேர்முக தேர்வு டிசம்பர் 6ஆம் தேதிக்கும், டிசம்பர் 6ஆம் தேதி புதன் கிழமை நடைபெற இருந்த தேர்தல் வியாழன் அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்