TNPSC குரூப் 4 அறிவிப்பு வெளியானது.! ஜூன் 9 தேர்வு.! முக்கிய தேதிகள் இதோ…

Published by
மணிகண்டன்

தமிழகத்தில் குறைந்தபட்ச கல்வி தகுதியில் அதிக தேர்வர்கள் எழுதும் முக்கிய தேர்வாக பார்க்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4)  தேர்வின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு கல்வி தகுதியை கொண்டு நிரப்பப்படும் இத்தேர்வின் மூலம் இம்முறை 6,244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு..! அதிகாரபூர்வ அறிவிப்பு

விண்ணப்பிக்க கடைசி தேதி :

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் அறிவிப்பு இன்று (30.01.2024) வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஆகும். அதற்குள் www.tnpsc.gov.in தளத்தில் உள்ளீடு செய்து பயனர்கள் தங்கள் தகவல்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளவேண்டும். பின்னர் அளிக்கப்படும் பயனர் ஐடி-யை கொண்டு உரிய வழிகாட்டுதலின்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

திருத்தம் :

விண்ணப்பங்களின் ஏதேனும் பிழையோ அல்லது திருத்தமோ செய்ய விரும்பினால் அதனை மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் மார்ச் மாதம் 6ஆம் தேதிக்குள் சரி செய்து கொள்ளலாம். அதற்கு பின்னர் விண்ணப்பங்களின் திருத்தம் செய்வது முடியாது.

தேர்வு தேதி :

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது தமிழக முழுவதும் ஒரே நேரத்தில் ஜூன் மாதம் 9ஆம் தேதி (09.06.2024) காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில் மூன்று மணி நேரம் நடைபெறும்.

கேள்விகள் – மதிப்பெண்கள் :

இதில் வழக்கம் போல் 200 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தமிழுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும் அதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதே போல் பொதுஅறிவு 75 கேள்விகளும் , கணிதம் (apptitude) 25 கேள்விகளும் கேட்கப்படும். இந்த 100 கேள்விகளுக்கும் 150 மதிப்பெண்கள் என மொத்தமாக 300 மதிப்பெண்களுக்கு தேர்வு வினாத்தாள் கணக்கிடப்பட்டு அதில் அதிக மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை உள்ளவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago