TNPSC குரூப் 4 அறிவிப்பு வெளியானது.! ஜூன் 9 தேர்வு.! முக்கிய தேதிகள் இதோ…
தமிழகத்தில் குறைந்தபட்ச கல்வி தகுதியில் அதிக தேர்வர்கள் எழுதும் முக்கிய தேர்வாக பார்க்கப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 (TNPSC Group 4) தேர்வின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. 10ஆம் வகுப்பு கல்வி தகுதியை கொண்டு நிரப்பப்படும் இத்தேர்வின் மூலம் இம்முறை 6,244 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
டாஸ்மாக் மதுபானங்களின் விலை உயர்வு..! அதிகாரபூர்வ அறிவிப்பு
விண்ணப்பிக்க கடைசி தேதி :
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வின் அறிவிப்பு இன்று (30.01.2024) வெளியாகி உள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி ஆகும். அதற்குள் www.tnpsc.gov.in தளத்தில் உள்ளீடு செய்து பயனர்கள் தங்கள் தகவல்களை கொடுத்து பதிவு செய்து கொள்ளவேண்டும். பின்னர் அளிக்கப்படும் பயனர் ஐடி-யை கொண்டு உரிய வழிகாட்டுதலின்படி விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
திருத்தம் :
விண்ணப்பங்களின் ஏதேனும் பிழையோ அல்லது திருத்தமோ செய்ய விரும்பினால் அதனை மார்ச் மாதம் 4-ம் தேதி முதல் மார்ச் மாதம் 6ஆம் தேதிக்குள் சரி செய்து கொள்ளலாம். அதற்கு பின்னர் விண்ணப்பங்களின் திருத்தம் செய்வது முடியாது.
தேர்வு தேதி :
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வானது தமிழக முழுவதும் ஒரே நேரத்தில் ஜூன் மாதம் 9ஆம் தேதி (09.06.2024) காலை 9.30 மணி முதல் நண்பகல் 12.30 மணி வரையில் மூன்று மணி நேரம் நடைபெறும்.
கேள்விகள் – மதிப்பெண்கள் :
இதில் வழக்கம் போல் 200 கேள்விகள் கேட்கப்படும். அதற்கு 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். தமிழுக்கு 100 கேள்விகள் கேட்கப்படும் அதற்கு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதே போல் பொதுஅறிவு 75 கேள்விகளும் , கணிதம் (apptitude) 25 கேள்விகளும் கேட்கப்படும். இந்த 100 கேள்விகளுக்கும் 150 மதிப்பெண்கள் என மொத்தமாக 300 மதிப்பெண்களுக்கு தேர்வு வினாத்தாள் கணக்கிடப்பட்டு அதில் அதிக மதிப்பெண் அடிப்படையில் முன்னுரிமை உள்ளவர்களுக்கு அடுத்த கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.