6,244 பணியிடங்கள்… ஜூன் 9இல் குரூப் 4 தேர்வு.! TNPSCயின் முக்கிய தேர்வு தேதிகள் இதோ….

TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய போட்டித்தேர்வாக உள்ள குரூப் 4 (Group 4) தேர்வு தேதியினை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC) அறிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் காலியாக உள்ள 6,244 காலி பணியிடங்களுக்கும் காலிப்பணியிட அறிவிப்பான் கடந்த ஜனவரி மாதம் 30ஆம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கான தேர்வு தேதியினை TNPSC அறிவித்துள்ளது. அதன்படி வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரே நாளில் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல TNPSC சார்பில் நடைபெறும் மற்ற முக்கிய தேர்வுகளின் தேதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1 முதன்மை தேர்வு (90 காலிப்பணியிடங்கள்) – 13.07.2024.
குரூப் 1B, 1C முதன்மை தேர்வு (29 காலிப்பணியிடங்கள்) – 12.07.2024.
டிகிரி அளவிலான துறைரீதியான TNPSC தேர்வு (105 காலிப்பணியிடங்கள்) – 11.08.2024.
குரூப் 2, 2A (2030 காலிப்பணியிடங்கள்) – 28.09.2024.
டிப்ளமோ/ ITI அளவிலான துறைரீதியான TNPSC தேர்வு (730 காலிப்பணியிடங்கள்) – 14.02.2024.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025
“நான்தான் சம்மனை கிழிக்கச் சொன்னேன், என்னை கைது செய்ய வேண்டியதுதானே” – சீமான் மனைவி கயல்விழி!
February 28, 2025