TNPSC குரூப் 2,2A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது.!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2,2A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2, 2A பிரிலிம்ஸ் தேர்வு 2022 இல் தகுதி பெற்ற விண்ணப்பதாரர்களுக்கு வரும் பிப்-25 ஆம் தேதி முதன்மைத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த நிலையில் குரூப் 2, 2A முதன்மைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியாகியுள்ளது.
மாநிலம் முழுவதும் காலியாக உள்ள 5529 குரூப் 2 பதவிகளை நிரப்பும் வகையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இந்த முதன்மைத் தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்கள் TNPSC குரூப் 2 ஹால் டிக்கெட்டை, TNPSCயின் அதிகாரபூர்வ இணையதளமான https://tnpsc.gov.in/ என்ற தளத்தில் டவுன்லோட் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுக்கு செல்லும் விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட் உடன் உரிய அடையாள ஆவணங்களையும் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப ஐடி(ID) மற்றும் பிறந்த தேதி (DOB)யை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்யலாம்.