TNPSC : தமிழகம் முழுவதும் இன்று குரூப் 2, குரூப் 2ஏ தேர்வு.!
குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ காலி இடங்களுக்கான முதன்மைத் தேர்வு இன்று (பிப்.8) நடைபெறுகிறது
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main) தேர்வு இன்று நடைபெறுகிறது. இந்த இரண்டு பிரிவுகளிலும் காலியாக உள்ள பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தமிழ்நாடு மாநில அரசின் பல்வேறு நிர்வாக மற்றும் நிர்வாக சாரா பதவிகளில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக TNPSC குரூப் 2 தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி,காலியாக உள்ள சார்-பதிவாளர், துணை வணிகவரி அலுவலர், தொழிலாளர் உதவி ஆய்வாளர் உட்பட பல்வேறு பணிகளில் உள்ள 2,540 காலிப்பணியிடங்களை நிரப்பப் பிப்ரவரி 8 மற்றும் 23 ஆம் தேதிகளில் இத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன.
இந்த பதவிகளுக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 15ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் டிசம்பர் 12ம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் குரூப்-2ஏ பதவியில் 2006 பதவிக்கான பிரதான தேர்வு இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது.
அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தமிழ் மொழி தகுதி தேர்வும், மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை பொது ஆங்கில தேர்வும் எழுதுகின்றனர்.