சென்னை : ஒருங்கிணைந்த குரூப் 2 மற்றும் குரூப் 2 A காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என TNPSC அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2327 பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வான குரூப் 2 மற்றும் குரூப் 2 A தேர்வுகள் குறித்த விரிவான அறிவிப்பை அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
அதன்படி, குரூப் 2 தேர்வில் 507 பணியிடங்களுக்கும், குரூப் 2 ஏ பிரிவில் 1820 பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். முதன்முறையாக இரண்டு பணியிடங்களுக்கும் சேர்த்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, நடப்பாண்டு காலியாக உள்ள பணியிடங்களுக்கு இன்று முதல் ஜூலை 19ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க மற்றும் கட்டணம் செலுத்த ஜூலை 19 இறுதி நாளாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்துத் தேர்வு செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்தளது.
மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்தை (https://www.tnpsc.gov.in) அணுகவும்.
நைரோபி : அமெரிக்க முன்வைத்த குற்றச்சாட்டால் அதானி நிறுவனப் பங்குகள், நேற்று பங்குச்சந்தையில் கடும் சரிவைக் கண்டது. இதன் விளைவாக…
திண்டுக்கல் : விசிக தலைவர் திருமாவளவன் இன்று தனது கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் பல்வேறு கருத்துக்களை கூறினார். தமிழக அரசியலில்…
நியூ யார்க் : அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நாசா…
கடந்த 2023 அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பு - இஸ்ரேல் போர் தீவிரமடைந்து தற்போது வரை காசாவில் பல்லாயிரக்கணக்கான…
சென்னை :கேரளா ஸ்டைலில் காரசாரமான நாவூறும் சுவையில் சம்மந்தி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான…
டெல்லி : அமெரிக்க வழக்கறிஞர்கள், இந்திய தொழிலதிபர் கெளதம் அதானி மீது இன்று ஒரு பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளனர். அவர்…