தேர்வர்களே!! டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு.!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதல் நிலைத்தேர்வின் முடிவுகள் வெளியாகியுள்ளது.

சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC ) நடத்தப்படும் குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாக இருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே தற்பொழுது வெளியாகியுள்ளது.
துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 90 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. குரூப் 1 தேர்வு தமிழ்நாடு முழுவதும் 797 மையங்களில் 2.38 லட்சம் பேர் எழுதினர்.
அதன் முடிவு இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடந்த 50 நாட்களில் முடிவுகள் வெளியாகியுள்ளது. தேர்வு எழுதியோர் முடிவுகளை டிஎன்பிஎஸ்சி இணையதளமான Www.tnpsc.gov.in இணையதளத்தில் காணலாம்.
முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற இருப்பவர்கள் அடுத்து நடைபெறும் முதன்மைத் தேர்வை எழுத தகுதி பெறுவார்கள். தகுதி பெற்ற தேவர்கள் செப்., 6ம் தேதி முதல் 15ம் தேதி வரை ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம். குரூப் 1 முதன்மை தேர்வு டிசம்பர் 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சென்னையில் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்து.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025