காலி பணியிடங்களுக்கு ஏற்ப 2023ம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி தேர்வு அட்டவணையை மாற்றவேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை.
அரசு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசு தாமதிப்பது கண்டனத்துக்குரியது என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அரசுத் துறைகள், கல்வி நிலையங்களில் காலியாக உள்ள 3.5 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் எனவும் இரண்டு வாக்குறுதிகள் தி.மு.க.வின் தேர்தல் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்த முடியாத, சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பினை உயர்த்தியது. காலிப் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காமல் வயது வரம்பை உயர்த்துவது என்பது சிகிச்சையே அளிக்காமல் நோயாளியை மருத்துவமனையில் வைத்திருப்பதற்கு சமம்.
திமுகவின் கணக்குப்படி பார்த்தால், மூன்றரை லட்சம் காலிப் பணியிடங்களை ஐந்தாண்டுகளில் நிரப்ப வேண்டுமானால், ஓராண்டிற்கு 70,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும். தற்போது ஒன்றரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் 10,000 காலிப் பணியிடங்களைக் கூட நிரப்பியதாகத் தெரியவில்லை. இந்தச் சூழ்நிலையில், 2023-ஆம் ஆண்டிற்கான புதிய தேர்வு அட்டவணையை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்டுள்ளது. இதில், வெறும் 1,754 பணியிடங்களுக்கான அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது.
குரூப் – 4 பதவிகளுக்கான தேர்வின் அறிவிக்கை நவம்பர் மாதம் வெளியிடப்படும் என்றும், அதற்கான தேர்வு 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது மட்டுமல்லாமல், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை பின்னர் அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குரூப் – 4 தேர்வு எழுதி கிட்டத்தட்ட 5 மாதங்கள் ஆகியும் அதற்கான முடிவுகள் இன்னமும் வெளியிடப்படவில்லை.இந்த நிலையில் அடுத்தத் தேர்வு 2024-ஆம் ஆண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடத்துவதில் தான் தாமதம் என்றால், முடிவுகளை வெளியிடுவதிலும் தாமதம் என்ற நிலை நிலவகிறது.
இது ‘திராவிட மாடல்’ அரசு அல்ல, ‘திராபை மாடல்’ அரசு, அதாவது எதற்கும் உபயோகமில்லாத பயனற்ற அரசு. எனவே, 2023 ஆம் ஆண்டிற்கான அரசுப் பணித் தேர்வுகள் அட்டவணையை தற்போதுள்ள காலியிடங்களுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை அதிமுக சார்பில் வலியுறுத்திக் என்று தெரிவித்துள்ளார்.
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…
உலகம் முழுவதும் கொண்டாடப்படும் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு கொண்டாடப்படும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை காணலாம். சென்னை :முருகா..…
வேலூர் : கடந்த டிசம்பர் 16ஆம் தேதி கே.வி.குப்பம் அருகே சாலை விபத்தில் சிக்கியது போல மர்மமான முறையில் படுகாயமுற்று…
பெங்களூரு: பெங்களூரு அருகே நெலமங்களா பகுதியில் கார் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்த விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 2…
உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும் கரம் மசாலாவை எப்படி தயாரிப்பது என்றும், அதன் மருத்துவ பலன்கள் பற்றியும் இச்செய்தி குறிப்பில்…
சென்னை: நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் நேற்றைய தினம் வெளிவந்த "விடுதலை 2" திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை…