டிஎன்பிஎஸ்சி தேர்வு சர்ச்சை – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம்!

Published by
பாலா கலியமூர்த்தி

தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார் என அமைச்சர் விளக்கம்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கமளித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் குறிப்பிட்ட சென்டர்களில் பயின்ற மாணவர்கள் அதிக அளவில் தேர்வாகியுள்ளதாகவும், அதில் முறைகேடு நடந்துள்ளதாகவும் எழுந்த புகார் தொடர்பாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேரவையில் விளக்கமளித்தார்.

அமைச்சர் கூறுகையில், தென்காசியில் 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்த நபர் தவறாக விளம்பரம் செய்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் மொத்தமே 397 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். பயிற்சி மையத்தை நடத்தும் ஒருவர் தான் தனது மையத்தில் பயின்ற 2000 பேர் தேர்ச்சி பெற்றதாக விளம்பரம் செய்துள்ளார்.

தட்டச்சர் பணிக்கான தேர்வு எழுதியவர்களில் தொழில்நுட்ப தகுதி அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. காரைக்குடியில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 615 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுகுறித்து சம்மந்தப்பட்ட மைய அதிகாரியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்கு முன்பு நடைபெற்ற தேர்வுகளில் இதுபோன்ற தேர்ச்சி உள்ளதா என ஒப்பிட்டு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் உள்ள 8 மையங்களில் நடந்த தேர்வில் முதல் 10,000 இடங்களில் 300 பேர் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் சீர்திருத்தம் மேற்கொள்ள கடந்த ஆண்டே குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டது. 7,000 காலி பணியிடங்களுக்கு சுமார் 24 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். 24 லட்சம் எழுதுவதற்காக 100 கோடி தாள்களை அச்சிட வேண்டியிருந்தது.

தொழில்நுட்ப வளர்ச்சி மிகுந்த இன்றைய நாளில் ஒவ்வொரு ஆண்டும் 24 லட்சம் பேரை தேர்வு எழுத வைப்பது நியாயமல்ல, 24 லட்சம் பேர் விண்ணப்பித்ததால் தேர்வுக்காக கூடுதலாக ரூ.42 கோடி செலவிடப்பட்டது. டிஎன்பிஎஸ்சி சீர்திருத்தத்துக்கு அனைத்து கட்சிகளும் ஒத்துழைப்பு அளிக்க அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார். டிஎன்பிஎஸ்சி சீர்திருத்தம் மூலமே இதுபோன்ற குளறுபடிகளுக்கு தீர்வு காண முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

“இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு… ” அரங்கத்தை அதிர் வைத்த அஸ்வின்!

காஞ்சிபுரம் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான ரவிச்சந்திரன் அஷ்வின் இன்று…

2 hours ago

திருப்பதி உயிரிழப்புகள் : நீதி விசாரணை, ரூ.25 லட்சம் நிவாரணம், அரசு வேலை! சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!

திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…

2 hours ago

சத்தீஸ்கர்: இரும்பு ஆலையில் பயங்கர விபத்து… 30க்கும் மேற்பட்டோரின் நிலைமை என்ன?

சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…

4 hours ago

ஹைதராபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் ஓய்வெடுக்க அட்டகாசமான படுக்கை வசதி!

ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக,  அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…

5 hours ago

தம்பி விஜயுடன் ஏன் சண்டை போடுகிறோம்.? சீமான் கொடுத்த விளக்கம்!

சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…

5 hours ago

திருப்பதி மரணங்கள்: ‘கைது நடவடிக்கை வேண்டும்’… பவன், சந்திரபாபு நாயுடுவுக்கு ரோஜா சரமாரி கேள்வி.!

ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…

5 hours ago