புகார்களை தெரிவிக்க செல்போன் செயலியை உருவாக்க டிஎன்பிஎஸ்சி முடிவு
டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் தங்கள் குறைகள், புகார்களை நேரடியாக தெரிவிக்க செல்போன் செயலியை உருவாக்க முடிவுசெய்துள்ளது.
சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது .இந்த முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் கண்டுபடித்து அவர்களுக்கு தேர்வு எழுத வாழ்நாள் தடைவிதிக்கப்பட்டது.
இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் தங்கள் குறைகள், புகார்களை நேரடியாக தெரிவிக்க செல்போன் செயலியை உருவாக்க முடிவுசெய்துள்ளது. இதற்கான டெண்டர் டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த செயலி அனைத்து வகையான செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தும் வகையில் உருவாக்க, தகுதியுடைய நிறுவனங்கள் ஜூன் 22-ம் தேதிக்குள் ஒப்பந்தப் புள்ளிகளை சமர்ப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.