தமிழகத்தில் ஒருங்கிணைந்த குடிமை பணி தேர்வுகள் தொகுதி இரண்டு Group 2 / 2A தேர்வுக்கு ஆண் தேர்வர்கள் 4,96,247 பேரும்,பெண் தேர்வர்கள் 6,81,089 பேரும் என மொத்தம் 11.78 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில்,தேர்வுக்கான நுழைவுச்சீட்டுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சமீபத்தில் வெளியிட்டிருந்தது.அதன்படி, குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட்டை http://tnpsc.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் TNPSC அறிவித்திருந்தது.
இந்த நிலையில்,தமிழகம் முழுவதும் நாளை (மே 21-ம் தேதி) 38 மாவட்டங்களில் 117 மையங்களில் குரூப் 2,2ஏ தேர்வுகள் நடைபெறவுள்ளது.அதன்படி,குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வுகள் நாளை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெற உள்ளது.இதனால்,தேர்வர்கள் நாளை காலை 8.30 மணிக்கே வர வேண்டும் என்றும்,8.59 மணி வரை மட்டுமே தேர்வு மையத்துக்குள் தேர்வர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் அதன்பின்னர் வருபவர்களுக்கு தேர்வறையில் அனுமதியில்லை எனவும் தேர்வர்கள் 12.45 மணி வரை தேர்வறைக்குள் இருக்க வேண்டும்.
மேலும்,நாளை நடைபெறும் குரூப் 2,2ஏ தேர்வுகளுக்கு முகக்கவசம் அணிவது கட்டாயம் என்றும் முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே தேர்வு மையங்களுக்குள் அனுமதி வழங்கப்படும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
மேலும்,தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வறையில் எப்போதும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்றும்,அதிகாரிகள் சரிபார்க்கும் போது மட்டும் முகக்கவசத்தை அகற்றி முகத்தை காட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.அதே சமயம்,தேர்வு எழுத வருவோர் ஸ்மார்ட் வாட்சிகளை அணிந்து வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து,குரூப் 2,2ஏ தேர்வு முடிவுகள் ஜூன் மாத இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…