GROUP VII-A தேர்வுக்கான தேதியை அறிவித்தது டிஎன்பிஎஸ்சி!

TNPSC

தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. இது GROUP தேர்வு என்ற வகைகளின் கீழ் பல்வேறு அரசு துறையில் உள்ள பணியிடங்கள் நிரப்படுகிறது. இந்த நிலையில், GROUP VII-A தேர்வுக்கான தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அறிவித்துள்ளது.

அதன்படி, தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையில் 9 முதல்நிலை நிர்வாக அதிகாரி காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள 9 முதல்நிலை நிர்வாக அதிகாரிகளை நிரப்புவதற்கான தேர்வுக்கு, விண்ணப்பிக்க வரும் நவபார் 11ம் தேதி கடைசி நாளாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, விருப்பமுள்ள, தகுதியுள்ள தேர்வர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். மேலும், 2024 ஜனவரி 6ம் தேதி முதல் இரு தாள்களும், ஜனவரி 7ம் தேதி மூன்றாவது தாளுக்கான தேர்வு நடைபெறும் எனவும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்